Sunday, December 30, 2012

சமுக வலை தளத்தில் சிக்கி தவிக்கிறேன்
வாழ்ந்தாலும் லைக்கு செத்தாலும் லைக்கு (Liku)
வாழ்க்கையில வழுக்கி விழுந்தாலும் லைக்கு 

லைகோ லைகோ மை லைப் இஸ் வீக்கு
பெஸ்புக் ட்விட்டெர் கீப்ஸ் மீ அவே ப்ப்ரம் ஸ்லீப்பு .  

uploading profile picturu and waiting for girls to commentu
wow superu if a girl confirms my friend requestu.........................to be continued very soon
Monday, December 17, 2012

நி சொல்லாமல் போனநி சொல்லாமல் போன ஒவ் ஒரு  சொல்லையும் எனக்குள்ளே சொல்லி பாக்குறன்

மனசுக்குள்ள கொதி நீறா வெந்து போகுறேன் .
தேடி தேடி சுத்துறன் தெரு நாயா கத்துறன்
உன் விழி பேசிய மொழியை மொழிபெயர்க்கிறன்
கவிதையா எழுதி எழுதி தமிழ் மொழியை கற்பழிக்கிறன்.

மதம் வேதம் சாதி இதில் மானம்கெட்ட காதல்
மதிகெட்ட நான் நீந்தி நீந்தி நீரில் முழுகி
குடும்பம் குத்துவிளக்கு கோவில் கும்பாபிஷேகம்
அம்மணமா கோல சாமி ஆடுதடா தெருகூத்து

பார்வை எல்லாம் தந்திரம் பணம்தாண்ட மந்திரம்
பணத்த பதுக்கி வையி பாதைய செதுக்கி வையி
பாசம் பறந்து வரும் நேசம் நெருங்கி வரும்
காதல் காந்தமாகும் காமம் காவியமாகும் .

Thursday, November 29, 2012

காஜாதீகாதலுக்கு ஜாதி என்னும் வேலி போட்டு
தம்மை தாமே தாழ்த்திகொள்கிறது
தமிழ் சமுகம் .

Saturday, November 17, 2012

கண்ணி

கண் பறிக்குதோ  மின்னால் வெட்டு
மார்பில் இரும்பு மணியனிந்து
இடையிலே மணி தெரிப்பானும் துளைபானும் புடை சூழ
கால்கள் கொதிநீரில் மாட்டிகொண்ட  செவல் போல் துடிக்க

சேற்றில் என் கை விரல்களை நட்டு
மார்பை மண்ணில் பதித்து
புலி  போல்
அண்ணார்ந்து பார்த்தேன்
புத்தன் முகத்தில் நிலவு
 மழை  நீர் துளி ரணமாய்
தலைவன் மனதில் நிழலாய்
இலக்கை இழந்த அம்பாய்
புரண்டு படுத்தேன்
நிமிர்ந்து பார்த்தேன் 
குருதி வெள்ளம் கரை புறண்டோடியது
தொடைகள் சிதரிய நிலையாய்
யான் சிக்கிய இந்த கண்ணி
என்னோடு போகட்டும் என்றெண்ணி
மினியிலுள்ள பஷனத்தை நக்கி மாண்டுபோனேன்


Monday, August 27, 2012

காதல் கவிதையானேன்சொல்லட்டுமா சொல்லாமல் போகட்டுமா
சொல்லவந்தேன்
தயங்கினேன்
மயங்கினேன்
விழிகளில் காதல் மொழி எழுதினேன்
ஏனோ ஊமையானேன்
காயமானேன்
காதல் கவிதையானேன்

Tuesday, August 21, 2012

எனக்குள் ஒரு பாடல்,உனக்குள் ஒரு மெட்டுஉன்னை ஒரு முறை கண்டு களித்திட எண்ணி துடிக்குது  கண்கள்
உன்னை சேரும் நாளை எதிர்பார்கிறேன் .

நீ பார்த்த ஓரபார்வையில் இன்னும் ஏங்கி சகுதுதடி நெஞ்சம்
நீ வரவேண்டும் ,ஒரு முத்தம் தர வேண்டும்.

என் உள்ளம் படைத்திடும் ஆயிரம் கற்பனைகள் உன்னையன்றி
இல்லை வேறு சிந்தனைகள் .

என் உள்ளம் சொல்லும் தவிப்பை மெல்ல  மொழி இன்னும் இல்லை
என்னை எண்ணி பார்க்க எனகே நேரம்மில்லை.

கற்பனையில் வாழுது நம் காதல் ,காலம் கரையுது கண்ணீரில் .
காற்றோடு தேடிபார்கிறேன்.காதல் கடலில் முழ்கி இறக்கிறேன்.

Friday, June 8, 2012

தாய் ஓவியம்மனதில் உன்னை வரைந்தேன்
உன் உருவம் வரவில்லை
வருமோ ? வராதோ ?
ஏங்குகிறேன் 
உன் இரத்தத்தால் என்னை வரைந்தாய்
உருவம் தந்தாய்,பின்பு ஏன் ?
என்னை குப்பை தொட்டியில் விட்டுவிட்டு சென்றாய் ?

Saturday, May 5, 2012

சிரிப்பு காயபடுத்தும்

நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயபடுத்தும்
காதலித்துபார்.


மின்சாரம்

மின்சாரம் பாய்ந்து
உண்டான புண்ணுக்கு அறுதல் மின்விசிறி


கடல்

உருவமற்ற உடல்
தண்ணிர் திடல்
அலைகளின் ஓடல்
கரையுடன் ஊடல்
உயிருள்ள கடல்


கவலை வேண்டாம்

காதல்  இல்லாத கவியும் உண்டு
வாசம் இல்லாத மலரும் உண்டு
வாழ்கை என்றால் தோல்வி உண்டு
கவலையை துறந்தால்  வெற்றி உண்டு

Wednesday, May 2, 2012

சாரல்

சில் என்று முகம் துடைக்கும் மென் மழை சாரல்

நினைவே நிழலாய்உன் கண்ணில் நான் படித்த மொழிகள் மெய் சொல்ல ,
ஏன்
என்னை பொய் சொல்லால் கொலை செய்து போனாய் .

Saturday, April 21, 2012

எய்ட்ஸ்

இங்கே ராமனுமில்லை சீதையுமில்லை  ஆனால் ஆணுறை (ஆண் உரை) உண்டு .