Saturday, November 13, 2004

விபச்சாரி


ராஜாங்கமும் அரசரும் எனக்கு அடிமை
ஒதுங்கி இருந்தாலும் உயரத்தில்  ஓர் இடம்

தேகம் திரும்பும் இடமெல்லாம் செல்வம்

பஞ்சமுமில்லை நெஞ்சமுமில்லை
உறவுமில்லை துயருமில்லை



முகங்கள்  புதுசு !அனுபவங்கள் பழசு

உலகத்தினற்கு இது இனியதொரு சேவை
ஜாதியை துறந்து சமத்துவம் காண்போம்

கண்முன் புகழ்வதும் இகழ்வதும் வாடிக்கை
பெருமை சிலகாலம் பொறுமை இல்லை

விண்ணை தொட்டு மண்ணை கவ்வுவேன்
தாசியான எனக்கு மறுபெயர் வேசி

எல்லாமுண்டு என் வாரிசுக்கும் உண்டு
இந்த குப்பை தொட்டி 


Monday, September 27, 2004

நகரம்

நான் என்னும் அகந்தை நாமாக மாற
நாம் வாழும் வாழ்கை நாகரிகமாக மாற
நாகரிகம் நம்முள் தேய்ந்து நகரமாயிற்று

Sunday, September 12, 2004

இலவசமாக

விவசாயத்திற்கு நீர் கொடுக்கவில்லை -------- அரசாங்கம்
விதை பயிரை மட்டும் இலவசமாக கொடுத்தது

Friday, April 30, 2004

கருப்பு நிலா



 அன்னையின் மார்பில் சாய்ந்திருந்தேன்
மழலை மொழிகளை அறிந்திருந்தேன்
பல கதைகளை கேட்டறிந்தேன்
தாய் பாலை மறந்து நிலா சோறு உண்டேன்
அன்று சிரிப்புடன் வெண் நிலவை கண்டேன்.


போர் களத்தில் நின்றிருந்தேன்
வெற்றியோ தோல்வியோ அஞ்சேன்
பல உயிர்களை கொன்று குவித்தேன்
இரத்தத்தை கையில் அள்ளி நிலவை பார்த்தேன்
அன்று சிகப்பான இரத்த நிலவை கண்டேன் .


காதலியுடன் அற்றங்கரையில் அமர்ந்திருந்தேன்
அவள் உடலழகை கண்டு இரசித்திருந்தேன்
என் இதழோடு முத்தம் என்னும் முத்திரை பதித்தாள்
இன்பத்தை தந்தாள் வைர ஒளிபோல் மெல்ல சிரித்தாள்
அன்று சுகமான வெள்ளி நிலவை கண்டேன் .



 தூக்கமில்லாமல் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன்
சொந்தமில்லாமல் தனிமையில் (கிடக்கிறேன்) வாழ்கிறேன்
வாழ்க்கையின் வயதை கடந்துவிட்டேன்
என்னையறியாமல் இடுகாட்டில் கண் வைக்கிறேன்
இன்று பௌர்ணமி ஆனால் கருப்பு நிலவை கண்கிறேன்.