Monday, June 29, 2015

ஒரு வரியில் சந்தோசம்

ஒரு வரியில் சந்தோசம்
கை நிறைய காசு
மறு வரியில் சந்தோசம்
பக்கத்தில் ஒரு பெண்
அதற்கும் அடுத்த வரியில் சந்தோசம்
கவலைகள் இல்லா மனசு
கூடுதலாக இன்னொரு வரியில் சந்தோசம்
இந்த வரிக்கு மேல் நீங்கள் என்னை எழுத சொல்லாமல் இருப்பது .


வறுமை காட்டிவிட்டேன்

என் வறுமையை ஒரு போதும் காட்ட விரும்பாத நான்
காட்டிவிட்டேன் என் கோலத்தில்


Saturday, June 27, 2015

சாதி இல்லை

சமுதாயத்துக்குள் சமத்துவம் மலர
சாதி இல்லை என்ற சொல் தேவை
சாதிக்குள் ஒளிந்து கொண்டு
சாதியை ஒழிக்கவே முடியாது


Friday, June 26, 2015

மனநோய்

காதில் கேட்கும் குரல்கள் உன்னை வழி நடத்தும்
நீ பேசும் சொற்கள் எல்லாம் அபத்தமாகும்
உன் கண்கள் காண்பவைகள் எல்லாம் பொய்யாகும்
காரணம் இன்றி பயம் வரும்
கண்டதுக்கெல்லாம் கோபம் வரும்

மனம் அழுத்தத்தால் மாசடைந்து வாடும்
உள்ளம் உள்ளிருந்து கொல்லும்
உன் நிலையை அறிய உன்னால் முடியாது
உன்னை யாரும் எளிதில்  பரிசோதிக்கவே முடியாது

உடல் நோய் மருந்தில் குணம் காணும்
மனநோய் ?
மருந்து + அன்பில் குணம் பெரும்.




Thursday, June 25, 2015

சித்திரம்


காணாத கண்ணிகளில் கனவு ஒன்றை காண்கிறேன்
அதில் உன் முகம் மாத்திரம் மொழி யாகும்
சொல்லாத காவியங்கள் தோட்டத்தில் சொரங்களாய் பூக்கும்
உன் சுவாசம் என் அருகில்
சிநேகத்தின் காற்றில் வரும் மோகம்
என்னுள் சிறகடிக்கும்

என் விழி முழுக்க வண்ண  சித்திரம்


Wednesday, June 24, 2015

கட்டுப்பாடு

என்னை கட்டி போட துடிக்குது ஒரு கட்டு கைறு
கட்டவிழ்ந்தால்  திசை மாறி போகுமோ என் கட்டுப்பாடு .
(கட்டவிழ்த்தால்)



Tuesday, June 23, 2015

புரிந்துகொள்

அன்று அவள் என்னை புரிந்துகொள்ள வில்லை
இன்று நான் அவளை புரிந்துகொள்ள வில்லை
நாளை இருவரும் தனிமையில் புரிந்து கொள்ள முயலுவோம் !


Monday, June 22, 2015

சேர்ந்து வாழ்கிறோம்

என்னை விட்டு சென்றவள்
என்னிடமிருந்து எட்டி நின்றவள்

மீண்டும் வந்தாள்
மீண்டு வந்தாள்

அழுக்காய் வந்தாள் அள்ளிகொண்டேன் அமுதாய்
கறையுடன் நின்று
என்னை கரைத்து விட்டாள்
கண்ணீரால்





(Extension)

மீண்டும்
என்னை காதலிக்கிறாயா என்றாள்
என்னை கல்யாணம் செய்கிறாயா என்றாள்

சிறுக்கி அவள்
சங்கமத்துக்காக சங்கலாயித்து நிற்கிறாள்

வாறி அனைத்து கொண்டேன் ....

(Extension-2)

மீண்டும் என்னை விட்டு சென்று விடுவாளோ
சென்றாலும் கவலை இல்லை என்றது என் மனம்

அவளை விட்டுவிட கூடாது என்றது உடல்

புறிதல் கொண்டபின் திருமணம் எதற்கு

மனங்கள் ஒன்று பட்டபின் காதல் எதற்கு
உடல்கள் ஒன்று பட்டபின் காமம் எதற்கு

சேர்ந்து வாழ்கிறோம்
நம்பிக்கையில்

Sunday, June 7, 2015

வேண்டா கவிதைகள்

என் கவிதைகளில்
அழகிய வெண் நிலவு வேண்டாம்
பொழிய துடிக்கும் விண்மீன்கள் வேண்டாம்
முதுகில் முளைக்கும் சிறகுகள் வேண்டாம்
பொய்களில் மிதந்து வரும் தேவதைகள் வேண்டாம்
காமம் தின்னும் காதல் கதைகள் வேண்டாம்
நான் நல்லவன் என்று செப்புகின்ற சொற்கள் வேண்டாம்
என் எண்ணங்களை எதிர்ரொளிக்காத நிகழ்கால நிகழ்வுகள் வேண்டாம்

(யாரோ ஒருவனாக  எதோ ஒன்றாக கனவுகளில் இருந்துவிட வேண்டும் )

நான் கனவுகள்


Saturday, June 6, 2015

காகித கப்பல்

நான் அனுப்பும் சமிக்கைகள் போதாதா ?
உன் கலங்கரை கண்களில் கருணை வாராதா ?
இப்படிக்கு
காதலில் தத்தளிக்கும்  காகித கப்பல்