உறைந்து கிடக்கும் பனிகளை
விரைந்து விரைந்து கடக்கிறோம்
வானம் முட்டும் மலைகளை
கால்களால் அளக்கிறோம்
நேரம் கூட பார்பதற்கு நேரமில்லையே
கண் விழித்து தேசத்தை காவல் காக்கிறோம்
உடல்களால் வேலி செய்து
உயிர்களால் வேள்வி செய்கிறோம்
கண்ணிமைக்கும் நேரத்தில் காலமாகிறோம்
(நினைவு தூண்களில் கல்வெட்டாகிறோம் )
வங்கி கணக்குகளில் காசோலையாகிறோம்
விரைந்து விரைந்து கடக்கிறோம்
வானம் முட்டும் மலைகளை
கால்களால் அளக்கிறோம்
நேரம் கூட பார்பதற்கு நேரமில்லையே
கண் விழித்து தேசத்தை காவல் காக்கிறோம்
உடல்களால் வேலி செய்து
உயிர்களால் வேள்வி செய்கிறோம்
கண்ணிமைக்கும் நேரத்தில் காலமாகிறோம்
(நினைவு தூண்களில் கல்வெட்டாகிறோம் )
வங்கி கணக்குகளில் காசோலையாகிறோம்