கனவுகளின் கவிதை தொகுப்பு
திமிர்வாதம் கொள்ளும்
துரோகம் துளிரும்
பேராசையில் மனம் பிறழும்
பெரும் தவறு செய்ய தூண்டும்
உதவாத எண்ணம் கொடுக்கும்
கொடுஞ்செயலை ஆதரிக்கும்
அந்த ஆணவத்தை அழிக்கும்
ஆயுதமே அறம்
அற செயலே ஆயுதம்