Thursday, November 29, 2012

காஜாதீ



காதலுக்கு ஜாதி என்னும் வேலி போட்டு
தம்மை தாமே தாழ்த்திகொள்கிறது
தமிழ் சமுகம் .

Saturday, November 17, 2012

கண்ணி

கண் பறிக்குதோ  மின்னால் வெட்டு
மார்பில் இரும்பு மணியனிந்து
இடையிலே மணி தெரிப்பானும் துளைபானும் புடை சூழ
கால்கள் கொதிநீரில் மாட்டிகொண்ட  செவல் போல் துடிக்க

சேற்றில் என் கை விரல்களை நட்டு
மார்பை மண்ணில் பதித்து
புலி  போல்
அண்ணார்ந்து பார்த்தேன்
புத்தன் முகத்தில் நிலவு
 மழை  நீர் துளி ரணமாய்
தலைவன் மனதில் நிழலாய்
இலக்கை இழந்த அம்பாய்
புரண்டு படுத்தேன்
நிமிர்ந்து பார்த்தேன் 
குருதி வெள்ளம் கரை புறண்டோடியது
தொடைகள் சிதரிய நிலையாய்
யான் சிக்கிய இந்த கண்ணி
என்னோடு போகட்டும் என்றெண்ணி
மினியிலுள்ள பஷனத்தை நக்கி மாண்டுபோனேன்