கண்விழித்து பாராமல்
தலை சாய்த்து ஓயாமல்
கை கால் சற்றும் அசராமல்
கூலி மிகுதி கேட்டகாமல்
கூனி குறுகி கும்பிடு போடாமல்
வெயிலால் சுட்டு
மழையால் நனைந்து
காற்றால் துடைத்து
யாருக்காகவோ எதுக்காகவோ
காத்து நிற்கிறேன்
யாருமில்லாத இடத்தை
யாருக்காகவோ காவல்காக்கிறேன்
சோளக்காட்டு பொம்மையாக