Friday, January 28, 2005

ஏய் அலையே

உயிர் பறிக்கும் ஆழிபெரலையே , உன் கடல் எல்லையை விட்டு
ஏன் பூமிக்கு வந்தாய்

பாதாளத்தையும் மலையையும் தீவுகளையும் இடம் மாற்றி
புகோணம் மாற்றத்தை உண்டாகினாய்

உன்னுள் உள்ள உயரிணங்களை கொள்ளையடித்தோம்
மனம் இருந்திருந்தால் மன்னிதித்ருப்பாய்.
 
பதிலுக்கு ஏன் ? கோபத்துடன் கோரதாண்டவம் ஆடினாய்

என் பிரியமான உயிர்களை உன்னுள் விழுங்கிவிட்டாயோ
அல்லது பிழைத்துபோகட்டும் என்று கரை எற்றினாயோ

பிஞ்சு நெஞ்சங்களை அலையால் கிழித்துவிட்டாய்
வாழ வழியில்லாமல் அலையவிட்டாய் , ஏய் அலையே 

மீனவர்களின் வாழ்வை ஒளி  ஏற்றி தொடங்கி வைத்த கடலே !
நீங்கள் வாழவே வேண்டாம் என்று இன்று முடிஉரை எழுதி விட்டாயோ ?