Thursday, February 24, 2005

டேய் விடுதலை

டேய் புருசா
உன் கொடுமையிலிருந்து தானே விடுதலை கேட்டேன்
ஏன் நீ விடுதலை பத்திரம் கொடுத்தாய்


ஈரம் காயவில்லை

என் உதட்டில் நீ இட்ட முத்தத்தின் ஈரம் இன்னும்  காயவில்லை
நம் காதலை மறந்துவிட்டு
வேறொருவனை மணமுடிக்க போகிறாய்
போடி காதலியே ஈரம் கண்டது என் கண்கள்


கதையல்ல காதல்

உன்னிடம் சொன்னது என் காதலை
கட்டு கதையல்ல கேட்டுவிட்டு
பதில் சொல்லாமல் செல்வதற்கு

-------------------------------------------
பதில் சொல்லாமல் செல்கிறாய்
உன்னிடம் சொன்னது
கட்டுக்கதையல்ல
என் காதல்
------------------------------------------------------


மரித்(தாய்)

என் பிறப்பில் எனக்கு உயிர் கொடுத்த தாயே
உன் உயிரை காக்க என்னிடம் பணமில்லை
மன்னிக்கவும்
நி மட்டும் ஏன் என்னைவிட்டு மரித்தாய் ?