Monday, March 28, 2005

சத்தத்தில் துங்குகிறேன்

அன்று தாயின் தாலாட்டில் தூங்கினேன்
இன்று சிலிங் பேன் சத்தத்தில் துங்குகிறேன்

Thursday, March 24, 2005

பஞ்சுமிட்டாய்



ஒரு ரூபாய்க்கு கொஞ்சம் பஞ்சு மிட்டாய் வாங்கினேன்
அதை நாலு பேர் பங்கு கேட்டு 'பஞ்ச' மிட்டாயாக்கிட்டிங்களே  !

Thursday, March 10, 2005

கொடுக்காத காதல் கடிதம்



சிந்தித்து சிந்தித்து
சிதறிய பேனா மை

அழகாக ஆராதனை செய்ய பிறந்த காகிதங்கள்
என் சொல்லை வடிவமாய் திரித்து எழுதினேன்

என் இதயத்தின் நிழலை அதில் பதித்தேன்
இரத்தத்தால் கையோப்பமிட்டேன்

அஞ்சலில் அனுப்ப அஞ்சினேன்
அஞ்சாமல் சந்திக்க வந்தேன்
கண்முன் உன்னை கண்டேன்
காணாதவன் போல் நின்றேன்

அன்போடு அரவனைத்தாய்
சகோதரத்துவத்தை கற்பித்தாய்

வருத்தப்பட்டேன் அவமானப்பட்டேன்

கிறுக்கல்கள் தெரிவதற்கு முன்
தெரியாமல் கிழித்தெரிந்தேன்

கொடுக்க வந்த காதல் கடிதத்தை