Wednesday, October 26, 2005

முட்டு வெட்டு

சரிந்து கிழே விழ இருந்த என்னை
முட்டு கொடுத்து தங்குவாய் என்று எண்ணினேன்

ஆனால்
என் இருதயத்தில்
ஒரு வெட்டு கொடுத்து
முற்றிலும் முறிய செய்தாய்

ஓரமாய் வளர்க்கிறேன் காதலை

ஒளியை கண்கள் பார்க்க
ஒலியை காதால் கேட்க
ஒளிந்து கொண்டது மனம்
ஒலிக்க மறந்தது உதடு
ஒளியுமின்றி ஒலியுமின்றி
ஓரமாய் வளர்க்கிறேன் காதலை


என்னையே ஏமாற்றிகொள்கிறேன்

உன் இதயத்தில் என் மீது காதல்
ஆனால்
உன் நாவால் பொய்யை ஊமிழ்கிறாய்
இருந்தபோதும்
உன் கண்களில் மெய்யை சுமக்கிறாய்
என்னை ஏமாற்றுகிறதாய் நீ எண்ணுகிறாய்
இல்லை இல்லை 
நான் உனக்காக ஏமாறுகிறேன்
என்னையே ஏமாற்றிகொள்கிறேன்