கனவுகளின் கவிதை தொகுப்பு
உன்னிடம் அனைத்து தவறுகளையும் செய்வேன்
நீ பொறுத்து போவாய் என்று
என்னிடம்
கோபத்தை காட்டாமல்
நீ சிரித்து போவாய் என்று
மீண்டும் மீண்டும்
தொல்லைகள் தருவேன்
நீ தொலைந்து போகாமல்
இருப்பாய் என்று
என் மனதை கொய்து
என் மென்மையை சோதித்து
என்னை துன்புறுத்தி
என்னை கொடுமை செய்வாள்
அதை நான் ரசிக்கிறேன்.