Monday, December 16, 2024

உடைந்த உள்ளங்கள் 💔

 உளிகள் உடைக்கவில்லை

உள்ளுணர்வு உடைக்கிறது

உள்ளத்தை


காதல் உணர்வு ஊற்றாய் ஊறி 

உள்ளங்கள் இணையும் வரை

உடல் உணர்வால் உருகி 

ஊன்றுகோல் காதல் பருகி

உள்ளத்தை ஊமை மொழியால்

ஊசியால் தைக்கும் 


உண்மையான காதல் உள்ளவரை

உள்ளங்கள் உடைக்கப்படும்

+++++++++++++


உடைந்த உள்ளங்கள் 💔

உரத்தில் உறுதியாக 

உந்தும் உடல் உயர்த்தி 

உள்ளம் உயிருக்கு

உத்திரவாதம் உயர்த்தி

ஊடல் தேடல் கொண்டால் 

உள்ளத்தின் உண்மை

உறுதுணையாக  உடன் வந்து

 காதல் உய்க்கும்







Wednesday, December 11, 2024

கரையா காதல்

 தண்ணி காத்துல தாவி குதிக்குது

அலை மேலே மனம் தத்தளிக்குது 

போவோமா கரை சேர்வோமா 

வாழ்வோமா இல்லை வீழ்வோமா

முயன்று தான் பார்ப்போமே

கரை எட்டும் காதல் கிட்டும்



Monday, October 7, 2024

தோன்றும் புரிதல்

  எல்லாம் இருக்கும்போது 


ஆயிரம் நண்பர்கள் உள்ளது போல தோன்றும்


ஒன்றுமில்லாத போது 


ஒரே ஒரே நண்பன் தான் நமக்கென மிச்சம் இருப்பது புரியும்


தோன்றுவது புரிதலாகாது 


தோன்றுவது மாயை


புரிதல் நிஜம் 








Wednesday, May 22, 2024

ஜோதிட கணிப்பு

 கோள்கள் இடமாறும் 

நட்சத்திரங்களை நேர் நோக்கும்


காலம் கட்டங்கள் தாண்டும்

கணிப்பு கணிக்க தூண்டும்


திசைகள் எட்டும் எண்கள் எட்டி பார்க்கும்

தீண்டும் முட்டும் கிரகங்கள் நெட்டி முறிக்கும்


உன் பயத்தை அது அதிகரிக்கும்

கணிப்பவன் நிஜத்தை எது சோதிக்கும்


அக கண் திறந்தால் 

அறிவியல் அறிந்தால்

நீ அறிவாய்

வானியலை 


கருந்துளை கண் பட்டால் அண்டமேது 

பெருவெடிப்பு இல்லாமல் இவைகள் ஏது


கட்டுக்கதைகள் பலிக்காது






Monday, February 26, 2024

முழுமையானவன்

 உங்கள் முழுமையான கோபத்தையும்

உங்கள் முழுமையான அன்பையும்

பெறுபவர் 

உங்கள் மனதிற்கு உரியவராக இருப்பார் 


அடித்தாலும்

பிடித்தாலும்

நோடிந்தாலும்

முடிந்தாலும்

உங்களை விட்டு விலகாமல் இருப்பார்


இது கவிதை இல்லை

உளவியல்

உள்வியல்

உயிர்வியல்


எத்தனை தடை சுவர் போட்டாலும்

தடைகளை உடைப்பார்

அல்லது

தடைகள் உடையும் வரை 

காத்துக்கொண்டே இருப்பார்.








Saturday, February 10, 2024

மரியாதை

 மரியாதை என்பது நிரந்தரமல்ல

கொடுத்தால் வாங்கிக்கொள்

தரவில்லை என்றால் தாங்கிக்கொள் 


குறைகளை கண்டறிந்து சரி செய் 

கிடைக்காத மரியாதைக்காக 

மனம் வருந்தாதே

முயற்சி செய்


நேரமும் காலம் மாறும்

காணாமல் போன மரியாதை தன்னாலே வந்து சேரும் .




Thursday, February 8, 2024

முழுமையாக காதலில்

 காதலுக்கு இடம்கொடாமல் ஒடிவிட்டேன்

கடைசியில் காதலும் காலமும் முட்டுகிறது..


காதல் வந்து

கண் விழித்து பார் என்றது

கண்களை இழந்துவிட்டேன் 

காதலில் கண்கள் இல்லா காதலில் 


அகத்தை மட்டுமே நம்பி இறங்குகிறேன் ஆழ்கடலில்



காதலில் முழுமையாக முழுகி முத்தெடுக்க 


Wednesday, February 7, 2024

முடங்கா முதன்மை

 என்னை முடக்க ஆயிரம் கரங்கள் உண்டு

முடக்கிய வரலாறும் உண்டு


அடையாளத்தை அழித்துகொள்

ஆதரவை அகற்றிகொள்

புறக்கணிப்பை தொடர்ந்துகொள்


முடக்கதையே எனக்கான களமாக்கி 

நான்தான் உனக்கான வரலாற்றை எழுத போகிறேன்.





Saturday, February 3, 2024

காதல் வெல்லும் சாதியை கொல்லும்

 என்னுடைய GF என்ன பண்ணுவான்னா ..


ஒருநாள் அவங்க வீட்டில்

அவங்க அம்மா அடுத்த அறையில் இருக்கும் போது


கத்தியை எடுத்து இடது கை மணிக்கட்டில் வைத்து கொண்டு..


LOVE பண்றியா இல்லையா என்றாள்..


சரி OK என்று பேசி கொண்டே


கத்தியை பிடுங்க போய் என் கையை கிழித்து விட்டாள்..


இப்படி தான் என்கிட்ட நடந்து கொள்வாள்..


அவங்க அம்மாவை வைத்து கொண்டே கேட்பாள்


அப்போ கொடுத்த PROMISE


இப்ப எனக்கு இவ்வளவு HEAD INJURY இருக்கு..

LIFE RISK இருக்கு ..


என்னிடம் 3 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறாள்..


Every time is precious for me.


கடைசியாக அவளுக்கு தெரிந்த நபரிடம் 

என்னை யார் என்றே தெரியாது..

தொல்லை பண்றான் என்று சொல்லிவிட்டு 

பிரச்சனையை கிளப்பிவிட்டு சென்றுவிட்டாள்..


காதலை சுமந்து கொண்டு 

விடுமுறை நாட்களில்

எங்க வீட்டை சுற்றி சுற்றி வருகிறாள்..


அவளுடன் பணி புரியும் அனைவருக்கும் என்னை தெரிகிறது..

பள்ளியில்,கல்லூரியில் படித்த அனைவருக்கும் என்னை தெரியும்..


நான் வாசல் திறந்து தான் கிடக்கிறது..

வருவது என்றால் வா என்று தான் இருக்கிறேன்..


++++++


நாங்க இரண்டு பேரும் 15 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்து இருப்போம்..


அவங்க அம்மா தான் ..

அவன் கீழ் சாதி என்று

சாதியை மேற்கோள் காட்டி..


சேரவிடாமல் செய்தார்..


பிறகு பல இன்னல்கள் கடந்து 

இவளை உயர்த்தி சிவில் சர்விசில் பதவியில் வைத்து இருக்கிறேன்.


அது தான் 

நான் அவளுக்கு கொடுத்த பெரும் தண்டனை..


இப்ப காலம் அவளை என்னிடம் அழைத்து வரும் பாருங்க..


அவங்க அம்மா முன்பு

திருமணம் செய்ய வேண்டும்..


சாதியாவது மயிராவது..


(சுருக்கமாக நடந்ததையும் நடக்க போவதையும் சொல்லியுள்ளேன் , சொல்லிட்டு செய்யனும் இல்லையா ? )


நான் 20 ஆண்டுகளாக முடிக்காமல் வைத்து உள்ள டாஸ்க் களில் இதுவும் ஒன்று ..


Time has arrived

Thursday, February 1, 2024

காதல் உரிமை

 உரிமை இருப்பதால் தான் நீ பேசாமல் இருக்கிறாய்

உரியவன் என்பதால் தான் நான் காத்து நிற்கிறேன்.

உணர்வோடு கலந்து

உயிரில் கலந்து

உடலில் கலப்போம்

காதலாக 

வெல்லட்டும் நம் காதல் 




Wednesday, January 24, 2024

ஆழமான காதல்

 அறை நொடியில் 

அவளை துறந்து விடுவேன்

கொடுத்த வாக்கை காப்பாற்ற 

காதலை காத்து

காத்து நிற்கிறேன் .


ஏனோ பாரா முகம் 

ஆவலை அறிந்தும்

அறியா அரிதாரம் பூசி

வாசித்தாலும் 

அறியும் என் ஆழ்மனம்

உன் ஆழ்மன காதலை




Thursday, January 4, 2024

நல்ல நண்பனாக

 ஒரு நல்ல உறவும் அமையவில்லை

ஒரு நல்ல நண்பனும் கிடைக்கவில்லை

ஆனால்

நிறைய துரோகிகளை மட்டுமே சம்பாதித்து இருக்கிறேன்

நல்ல உறவாக

நல்ல நண்பனாக