Wednesday, May 22, 2024

ஜோதிட கணிப்பு

 கோள்கள் இடமாறும் 

நட்சத்திரங்களை நேர் நோக்கும்


காலம் கட்டங்கள் தாண்டும்

கணிப்பு கணிக்க தூண்டும்


திசைகள் எட்டும் எண்கள் எட்டி பார்க்கும்

தீண்டும் முட்டும் கிரகங்கள் நெட்டி முறிக்கும்


உன் பயத்தை அது அதிகரிக்கும்

கணிப்பவன் நிஜத்தை எது சோதிக்கும்


அக கண் திறந்தால் 

அறிவியல் அறிந்தால்

நீ அறிவாய்

வானியலை 


கருந்துளை கண் பட்டால் அண்டமேது 

பெருவெடிப்பு இல்லாமல் இவைகள் ஏது


கட்டுக்கதைகள் பலிக்காது