உளிகள் உடைக்கவில்லை
உள்ளுணர்வு உடைக்கிறது
உள்ளத்தை
காதல் உணர்வு ஊற்றாய் ஊறி
உள்ளங்கள் இணையும் வரை
உடல் உணர்வால் உருகி
ஊன்றுகோல் காதல் பருகி
உள்ளத்தை ஊமை மொழியால்
ஊசியால் தைக்கும்
உண்மையான காதல் உள்ளவரை
உள்ளங்கள் உடைக்கப்படும்
+++++++++++++
உடைந்த உள்ளங்கள் 💔
உரத்தில் உறுதியாக
உந்தும் உடல் உயர்த்தி
உள்ளம் உயிருக்கு
உத்திரவாதம் உயர்த்தி
ஊடல் தேடல் கொண்டால்
உள்ளத்தின் உண்மை
உறுதுணையாக உடன் வந்து
காதல் உய்க்கும்