அன்னையின் மார்பில் சாய்ந்திருந்தேன்
மழலை மொழிகளை அறிந்திருந்தேன்
பல கதைகளை கேட்டறிந்தேன்
தாய் பாலை மறந்து நிலா சோறு உண்டேன்
அன்று சிரிப்புடன் வெண் நிலவை கண்டேன்.
போர் களத்தில் நின்றிருந்தேன்
வெற்றியோ தோல்வியோ அஞ்சேன்
பல உயிர்களை கொன்று குவித்தேன்
இரத்தத்தை கையில் அள்ளி நிலவை பார்த்தேன்
அன்று சிகப்பான இரத்த நிலவை கண்டேன் .
காதலியுடன் அற்றங்கரையில் அமர்ந்திருந்தேன்
அவள் உடலழகை கண்டு இரசித்திருந்தேன்
என் இதழோடு முத்தம் என்னும் முத்திரை பதித்தாள்
இன்பத்தை தந்தாள் வைர ஒளிபோல் மெல்ல சிரித்தாள்
அன்று சுகமான வெள்ளி நிலவை கண்டேன் .
தூக்கமில்லாமல் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன்
சொந்தமில்லாமல் தனிமையில் (கிடக்கிறேன்) வாழ்கிறேன்
வாழ்க்கையின் வயதை கடந்துவிட்டேன்
என்னையறியாமல் இடுகாட்டில் கண் வைக்கிறேன்
இன்று பௌர்ணமி ஆனால் கருப்பு நிலவை கண்கிறேன்.