திருக்கோவில் காரிருள் கருவறைக்குள்
மாவிளக்கு தீபத்தில் தங்கமுகம் கண்டேன்
தீப ஒளி கடந்து அவள் என்னை பார்த்த விழி அழகு
என்ன அழகு அவள்
ஏந்தி நிற்கும் மார்பழகு
தாங்கி நிற்கும் இடை அழகு
கொடி அழகு அவள்
நடை அழகு
உடை அழகு
அவளுடன் நீ பழகு
என்றது மனம்
அவள் அப்படி ஒரு அழகு