Sunday, May 15, 2005

காதலுக்கு கண்கள் தேவையில்லை

காதல் என்பது
கண்களில் தோன்றி
உடலில் முடிவதல்ல
உள்ளத்தில் தோன்றி
உள் உணர்வுகளில் முடிவது
அகவே தான் காதலுக்கு
கண்கள் இல்லை
கண்களும் தேவையில்லை

Thursday, May 5, 2005

தீ மணக்கிறது

சந்தனக் காட்டில் தீ
சாம்பல் மணக்கிறது

Tuesday, May 3, 2005

பரித்த பிறகு பூத்த மலர்கள்



பொதுவாக மலர்கள் பரித்த பிறகு பூப்பதில்லை
பரித்த பிறகு காய்ந்த மலர்கள் தான் அதிகம்
ஆனால் இந்த மலரோ பிரித்த பிறகு தான் பூக்கும்

அடடா பூக்களில்தான் எத்தனை வகை
ஒவ்வொரு பூக்களுக்கும்
வெவ்வேறு மனமுண்டு

பரித்த பிறகு  பூக்காத அந்த மலர்கள்
பரித்த பிறகும் மணக்கிறது

பரித்த பிறகும் மனக்காத இந்த பூக்கள்
பரித்த பிறகே பூக்கிறது

ஆண் பெண் உயிரணுக்கள் ஒன்று  கூடி
பத்து மாத இடைவேலையில்
ஒரு பூ கருமுட்டையில் மொட்டாகிறது

காம்பு நுனியில் பூ பூப்பது போல
தொப்புள் கோடி நுனியில் ஒரு பூ பூப்பதற்கு ஆயுத்தமாகிறது
 
காம்போடு கில்லி பூ பறித்தாலும்
மனம் விசி காய்ந்து விழும்

தொப்புள் கொடியோடு கிள்ளி பறித்தாலும்
தொப்புள் கொடி மட்டும் தான் காய்ந்து விழும்

பிள்ளை என்னும் பூ
பரித்த பிறகும் பூத்துவிடும்

இன்னும் பல மனித பூக்கள்
பூப்பதற்கு வித்தாகிவிடும் (விதையாகி) விடும்