Saturday, May 5, 2012

சிரிப்பு காயபடுத்தும்

நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயபடுத்தும்
காதலித்துபார்.


மின்சாரம்

மின்சாரம் பாய்ந்து
உண்டான புண்ணுக்கு ஆறுதல் மின்விசிறி



கடல்

உருவமற்ற உடல்
தண்ணிர் திடல்
அலைகளின் ஓடல்
கரையுடன் ஊடல்
உயிருள்ள கடல்


கவலை வேண்டாம்

காதல்  இல்லாத கவியும் உண்டு
வாசம் இல்லாத மலரும் உண்டு
வாழ்கை என்றால் தோல்வி உண்டு
கவலையை துறந்தால்  வெற்றி உண்டு

Wednesday, May 2, 2012

சாரல்

சில் என்று முகம் துடைக்கும் மென் மழை சாரல்

நினைவே நிழலாய்



உன் கண்ணில் நான் படித்த மொழிகள் மெய் சொல்ல ,
ஏன்
என்னை பொய் சொல்லால் கொலை செய்து போனாய் .