Thursday, March 28, 2013

உயிர் தடம்




( சாலை ஓரம்
சோலை பூக்கள்
தேன் வண்டு தேடுது
செவி ஓரம் ரிங்காரம் பாடுது )

கானல் நிறாய்
கனவுகளில்
நீ வாராய்

தொடு வானம் வரை
என்னை கூட்டிகொண்டு
நீ போறாய் !


மலை தொடர் பள்ளதாக்கில்
என்னை தள்ளிவிட்டு
தாலாட்டு பாடுகிறாய்

வழிபோக்கனாய் உறவாடி
வேகமாய் கடந்துவிடுகிறாய் (கடந்துபோகிறாய்)

நீர் தடம்
நெஞ்சில் பதித்து
உயிர் தடம்
அழித்து விடுகிறாய் (விட்டாய்)


Friday, March 22, 2013

நிழலாய்

நிழலாய் தொடர்கிறேன்
நிஜத்தின் கால்களில் மிதிபட்டு