( சாலை ஓரம்
சோலை பூக்கள்
தேன் வண்டு தேடுது
செவி ஓரம் ரிங்காரம் பாடுது )
கானல் நிறாய்
கனவுகளில்
நீ வாராய்
தொடு வானம் வரை
என்னை கூட்டிகொண்டு
நீ போறாய் !
மலை தொடர் பள்ளதாக்கில்
என்னை தள்ளிவிட்டு
தாலாட்டு பாடுகிறாய்
வழிபோக்கனாய் உறவாடி
வேகமாய் கடந்துவிடுகிறாய் (கடந்துபோகிறாய்)
நீர் தடம்
நெஞ்சில் பதித்து
உயிர் தடம்
அழித்து விடுகிறாய் (விட்டாய்)