அவள் பின்னிய கூந்தலில்
சிறு பூங்காடு
நெற்றியில் சரிந்து விழும்
அந்த ஒற்றை முடி
சின்னச்சிறு பொட்டு
இமை மறைக்கும் அந்த ஓரப்பார்வை
மெல்லியப் புன்னகை
நகம் கடிக்கும் செவ்விய இதழ்
நாணிய தலை.
முனுகிய வார்த்தைகள்
மூடிய அங்கங்கள்
கோணி நின்று
கால்விரல் மடித்து
விழி நோக்குவாள்