கண்ணே உன்னை காணும்முன்
காதல் வேண்டாமேன்றிருந்தேன்
விழியும் விழியும்
விளம்பிய பின்பு
வழி மறந்துபோனேன்
என்னை மறந்து போனேன்
தன்னிலை யற்று போனேன்
தறுதலையாய் போனேன்
பாதை தொலைத்து
பாதசாரியாய் (பரதேசியாய்) போனேன்
வழியில் ஒரு இலையில்லா
மரம் கண்டேன்
அதன் காலடியில்
இளைப்பாரிக்கொண்டேன்
இளமை என்னும் இளைஞன்
என்னை விட்டு போகக்கண்டேன்
வறுமை கண்டேன்
வனாந்திரம் கண்டேன்
வாடிய மலரை கண்டேன்
வண்ணமிழக்க கண்டேன்
வயதை கொண்டேன்
மரிக்கிறேன்
பறக்கிறேன்
பட்டாம்புச்சியாக