Friday, July 18, 2014

சொல் நில்

சொல் என்றால்
சொல்லாமல் போகிறாள்
நில் என்றால்
நில்லாமல் போகிறாள்


நீருக்கு நெருப்பாகிறாள்  
(நெருப்புக்கு நீராகிறாள்)
தென்றலுக்கு புயலாகிறாள் 
(புயலுக்கு தென்றலாகிறாள்)

மழைக்கு இடியாகிறாள் 
மலைக்கு மகுடமாகிறாள்

ஏட்டுக்கு எழுத்தாகிறாள்
என்
எண்ணமெல்லாம் அவளாகிறாள்