Monday, August 4, 2014

மெய்யாகிய நான் பொய்யாகிறேன்



என் வீட்டு
வாசலை திறந்து வைத்திருக்கிறேன்
யாரும் வருவதில்லை
உங்கள் நினைவுகளை தவிர

உறவுகளிடம் அன்பை எதிர்பார்க்கிறேன்
வெறுப்பை பரிசாக பெறுகிறேன்

நான்
வாழ்கிறேனா
இல்லை
சாகிறேனா
என்றொரு சந்தேகம்
மரியாதையை இழக்கும் பொழுதுதெல்லாம்  ( நொடிகள் )

பணம் பதவி 
உறவுகளை
காலடியில்
கட்டிபோடும்

இழந்தால்
இழிவுபடுத்தும்

என்னை வெறுப்பால் துரத்தும்முன்
உங்களை துறக்கிறேன்
உறவை அறுக்கிறேன்

மெய்யாகிய நான்
பொய்யாகிறேன்