Tuesday, November 18, 2014

பிச்சைகார மனம்

அவள் போடும் பிச்சைக்காக காத்திருக்கிறது
இந்த மனம்

(அவள்கள் போடும் பிச்சைக்காகவும் காத்திருக்கிறது
இந்த மனம்) (மானம் கேட்ட மனம்)

 அவள் போடும் பிச்சைக்காக ஏன் காத்திருக்கிறது
இந்த மனம்

பிச்சைகார மனம் காத்திருக்கிறது
அவளுக்காக.......!

(இச்சை மனம் பிட்சைக்காக காத்திருக்கிறது)

Monday, November 17, 2014

நிகழும் நிகழ்வுகள்



அருகில் நீ தோன்றும் தருணத்தில்
என்னுள் நிகழும் நிகழ்வுகள்

உன் பார்வையில் உடல் விசை இழக்கிறேன்
என் நாடித்துடிப்பில் பிடில் இசை இசைக்கிறேன்

பேசும்பொழுது ராகமாய் வாய் குளறுகிறேன்.
கண்களை நேர்நோக்காமல் தாளம் தப்புகிறேன் (தட்டுகிறேன்)

உன் முக பாவங்களில் நாவு வறண்டு போகிறேன்
என் செவிகளுக்குள் வண்டு மொழி கேட்கிறேன்

துரு துருவென துள்ளும் என் இதய துடிப்பில் துருவங்கள் தொடுகிறேன்
 உன்னழகில் வியக்கிறேன் என்னையே மறக்கிறேன்

          (கைகளால் கட்டி அரவணைக்க விரும்புகிறேன்
            இந்த உணர்வுகளை அணு அணுவாய் ரசிக்கிறேன்.)

என்னாருகில் நி நிரந்திரமாய் இருந்துவிட கூடாதா ?
இந்த நிகழ்வுகள் இப்படியே தொடராதா ?

Saturday, November 15, 2014

கோவமா

என்மேல என்ன அம்ம்புட்டு கோவமா
உன் கண்ணால கொஞ்சம் கருணைகட்டம்மா

தனன ந ந தன தனன ந நா

Friday, November 14, 2014

கவியழகி

கண்ணுக்கு கலைகள் இருக்கு
இதழுக்கு மலர்கள் இருக்கு
கழுத்துக்கு சங்குகள் இருக்கு
மார்புக்கு கனிகள் இருக்கு
இடைக்கு கொடிகள் இருக்கு
கால்களுக்கு வாழை தண்டுகள் இருக்கு

நினைத்து பார்க்க கனவுகள் இருக்கு
கற்பனையால் வடித்து பார்க்க கவிதைகள் இருக்கு

மொத்தத்தில் பெண் என்றால் அழகு இருக்கு


Thursday, November 6, 2014

கனவுகளில் வரும் தேவதை

என்னை கொள்ளும் தேவதை கனவுகளில் நீர்-வானமாகிறாள்.


முத்த அலை

நெருங்கி வரவில்லை முத்தம் மட்டும் கிடைத்தது
...........அலைகற்றையில்...... !