Monday, November 17, 2014

நிகழும் நிகழ்வுகள்



அருகில் நீ தோன்றும் தருணத்தில்
என்னுள் நிகழும் நிகழ்வுகள்

உன் பார்வையில் உடல் விசை இழக்கிறேன்
என் நாடித்துடிப்பில் பிடில் இசை இசைக்கிறேன்

பேசும்பொழுது ராகமாய் வாய் குளறுகிறேன்.
கண்களை நேர்நோக்காமல் தாளம் தப்புகிறேன் (தட்டுகிறேன்)

உன் முக பாவங்களில் நாவு வறண்டு போகிறேன்
என் செவிகளுக்குள் வண்டு மொழி கேட்கிறேன்

துரு துருவென துள்ளும் என் இதய துடிப்பில் துருவங்கள் தொடுகிறேன்
 உன்னழகில் வியக்கிறேன் என்னையே மறக்கிறேன்

          (கைகளால் கட்டி அரவணைக்க விரும்புகிறேன்
            இந்த உணர்வுகளை அணு அணுவாய் ரசிக்கிறேன்.)

என்னாருகில் நி நிரந்திரமாய் இருந்துவிட கூடாதா ?
இந்த நிகழ்வுகள் இப்படியே தொடராதா ?