நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Friday, May 29, 2015
காதல் சுமை
இது வரையிலும் என்னை சுமந்த
காதலே
உன்னை கொஞ்சம் நான் சும்மக்க கூடாதா ?
Sunday, May 24, 2015
நான் நானாகவே இருக்கிறேன்
செழிப்பான
ஒரு காலத்தில் என் கால் அடியில்
என் தயவுக்காக காத்து கிடந்தவர்கள்
இன்று நான் இளைத்தபின் என்னை
பார்த்தும் பார்க்காததை போல்
கண்டும் காணாததை போல்
செவென செல்கிறார்கள்
செழித்தாலும் இளைத்தாலும் நொடிந்தாலும்
நான் நானாகவே இருக்கிறேன்
Saturday, May 23, 2015
பசி தாங்கிய தேகம்
பசி தாங்கிய தேகம்
சிறு பிணிக்கு நொடிந்து போகுமா ?
Thursday, May 21, 2015
காசுக்காக காமம்
காசு இல்லாத உனக்கு காமம் எதற்கு
விலைமாது கேட்டாள்
அன்று
அது வாடிக்கையான ஒன்று
காசு இல்லாதவனுக்கு காமம் எதற்கு
மனைவி கேட்டாள்
இன்று
இது வேடிக்கையாய் இருந்தது
Saturday, May 16, 2015
என்னிடம் உள்ளது
என்னிடம் இல்லாதது அவளிடம்
என்ன உள்ளது ?
அவளிடம் இல்லாதது என்னிடம் உள்ளது .............!
அன்பு
காதல்
Tuesday, May 5, 2015
வசை வீசி
வசை வீசி
(வசை வீசிய பின்)
என் மேல் மிசை கொள்வான்
இரவுகள் முழுவதும் வீனாக்களால்
எனை துளைத்தெடுப்பான்
நித்தம் நித்தம் நிந்தனை (செய்வான்)
(அதில்)
சிதரிபோகும் என் சிந்தனை
எனக்கென்று யாருமில்லா
தனிமை சூழல்
சூழ்ந்து கொண்டு எனை ஆட்கொள்ளும்
அதில் விழிபிதுங்கி
என் வழி மறந்து போகும்.
Saturday, May 2, 2015
போனவை போகட்டும்
போனவை போகட்டும்
வந்தவை வரட்டும்
நிதானமாய் நடைபோடு
நேர்மையாய் வாழ்ந்திடு
யதார்த்தம்தான் நம் வாழ்க்கை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)