அவள் பல காதல்களை கடந்து வந்தவள் (ன்)
நான் சில காதல்களை கடந்து வந்தவன் (ள்)
இருவரும் சில காலம் பல வகை காதல்களை செய்தோம்
சில நேரங்களில் பல வகை காமம் முளைத்தது
பல நேரங்களில் சில சச்சரவுகள் வளர்ந்தது
பிறகு சில பல அனுபவங்களை கற்றுக்கொண்டு
மறுகாதலை தேடி சில சந்தர்பங்களை கொண்டு
பல தேசம் செல்கிறோம்