Thursday, March 31, 2016

தமிழரசி

உங்களுக்கெல்லாம் தமிழ்  தாய் தான் தெரியும்
எனக்கு தாயே தமிழ் தான்
என்  அம்மா தமிழம்மா
தமிழரசி


Sunday, March 27, 2016

கை கொடுக்கும் கை

எதுவும் இல்லை (ஏதுமில்லை) என்ற போதிலும்
யாரிடமும் கை ஏந்துவதில்லை

நொந்து நொடிந்த போதிலும்
நேர்மையை கை விட்டதில்லை

ஆதாயம் பல இருந்த போதிலும்
பிறரிடம் கைகட்டி நின்றதில்லை

சறுக்கி விழுந்த போதிலும்
நம்பியவர்களை  கை கழுவி விட்டதில்லை



Saturday, March 26, 2016

தனிமை சுகம்

எவ்வளவு வலியையும் வேதனையும்
கடந்து வந்திருப்பேன்
இன்று தனிமை கூட
சுகமென பழகிவிட்டது


Wednesday, March 23, 2016

இரவு விடியல்

ஒவ் ஒரு இரவும்
பிறக்கிற புது உற்சாகம்
என்னை இரவு முழுவதும்
கண்விழிக்க வைத்துவிடுகிறது
மறு நாள் காலை
சோர்வுடன் உறங்கிவிடுகிறது
மதிய வேலையில் அனல் பறக்க
விடியல் பிறக்கிறது


Monday, March 21, 2016

என் கனவுகள்

 என் கனவுகள்
பெண்களும் பேய்களும் பொய்களும்
நிறைந்த உலகம்


Saturday, March 12, 2016

நான் கனவுகளேன

நீங்கள் என்னை கண்காணிக்கும் முன்பே
உங்கள் தடங்களை நான் நுகர்ந்துவிட்டேன்
என்பதை நீங்கள் ஏன் இன்னும் உணரவில்லை

நீங்கள் ஒரு அடி கூட என்முன்னே எடுத்து வைக்க இயலாது
விஸ்வரூபமாய் பெருகி நிற்கும் என் பலக்ரம்மம் உங்களை அச்சுறுத்தும்
மீறினால் என் பேரன்பு உங்களை அரவணைக்கும்

எதுவாகிலும் நீங்கள் நகர்வதை பொறுத்தே
என் முடிவு அமையும்

அதுவரை கனவுகளுடன்
காலம் கழிப்பேன்

நான் கனவுகளேன


கெட்டல்லவன்

என்னைய கெட்டவன்னு நினைச்சா
நான் கெட்டவன்
என்னைய நல்லவன்னு நினைச்சா
நான் நல்லவன்

ஆகா மொத்தத்துல
நான் கெட்டவனாகிய நல்லவன்


Monday, March 7, 2016

நீ யார்

நேற்று
நீ யார் என்று கூட தெரியாது
நீ பிழைக்க இரத்தம் கொடுத்தேன்
இன்று
நீ யார் ? நீ என்ன ஜாதி ? என்கிறாய்  !

(நல்ல வேலை மனித ஜாதியில் நான் பிறந்ததால் நீ பிழைத்தாய்)


Sunday, March 6, 2016

இதயம் தேய்கிறது

என் அன்பே
எனக்கு
உன்னைவிட்டால் யாருமில்லை

யாரிடம் சென்று முறையிட முடியும்
யார் கேட்பார் என் கதையை

உன் காதல் சோதனைகளால்
என் இதயம் தேய்கிறது


Friday, March 4, 2016

புது கனவு

புது கனவு காண போகிறேன்
புது நிலவை பார்க்க போகிறேன்

புது வின் மீன்களுடன் ஊர் சுற்ற போகிறேன்
புது மழையில் குளித்து புது ஆடை உடுத்தி

புது மனிதனாக பிறக்க போகிறேன்
புது உலகில்


தீராத காதல்

அவள் கூந்தலில் மது/மலர் வாசம்  நுகர்ந்திடாத போதும்
அவள் இதழ்களில் தேன் சுவை சுவைத்திடாத போதும்
அவள் மார்தனில் தலைதனை சாய்த்திடாத போதும்
அவள் இடைதனில் விரல்கள் படர்ந்திடாத போதும்
அவள் சுனைதனில் காமகனைகள் தொடுத்திடாத போதும்
அவள் மேல்  எப்படி வந்தது இந்த தீராத காதல் ?



Wednesday, March 2, 2016

கண்ணே கண்ணே

கண்ணே கண்ணே
நீ அழகு ஓவியம்

உன்னை தீட்டும் முன்பே
அவன் எடுத்து கொண்டான்

 பெண்ணே பெண்ணே
நீ அறிவு காவியம்

உன்னை எழுதும் முன்பே
அவன் கிழித்து விட்டான்

என்ன என்னனமோ சொல்லவந்தேன்
கண்ணே உன்னை காணாமல் கலங்கி போனேன்.