Thursday, September 29, 2016

போகும் நேரங்கள்

எனக்கு நேரம் போதவில்லை
எதை முந்தி செய்வது
எதை பிந்தி செய்வது
என்று என்னை நானே குழப்பிக்கொள்கிறேன்
போதாத நேரம்
போக போக குறைகிறது

போக விரும்பிய வாசல்கள் மூடி கிடக்கிறது
போக விரும்பாத பாதைகள் வரவேற்கிறது

போக போக இன்னும் என்னென்ன நடக்குமோ
நடக்கவிருக்கும் நேரங்களை
நடக்காமல் நிறுத்த முடியுமோ

போய்தான் பார்ப்போம் வியப்புடன்
புதிராக போக வேண்டிய நேரங்கள்
முன்னால் காத்து நிற்கிறது

உங்களைபோல் நானும் ஒருநாள்
நேரம் வந்ததும்
போக தான் போகிறேன்

அதுவரை நிற்காமல் போய் கொண்டே
இருப்பேன்


Saturday, September 24, 2016

பொய்மலரே

மலரே மலரே பொய்மலரே
அழகோ அழகு கொள்ளையழகு
மணமோ மணம் மனம் மயக்கும் மணம்
குணமோ குணம் குறிஞ்சி குணம்
பவமோ பவம் பவ்விய பவம்
சுகமோ சுகம் சூழ்ச்சி சுகம்
சாபமோ சாபம் சத்திய சாபம்

பாவமோ பாவம் கொண்டவன் பாவம்


Saturday, September 17, 2016

தயக்கம் ஏன்

திறந்த கதவுகள் என்றும் மூடபடுவதில்லை
தயக்கத்தை துறந்து
மெல்ல முன்னே நகர்ந்து
உள்ளே நுழைந்தால்
விருந்துகள் காத்துகிடக்கிறது,
உண்டு மகிழ்ந்து
மார்போடு தலைசாய்த்து உறங்கலாம்.



Thursday, September 8, 2016

விறுகொண்டு எழு

விறுகொண்டு எழு
விடியலை தொடு

வானம் உனதே
வையகமும் உனதே

உறங்காதே மனமே

காலம் நமக்காய் காத்திறாது
கனியுமென்றால் கிடைத்திறாது

எதுவும் தடையில்லை
தடைகளுக்கு இங்கே இடமுமில்லை

உண்மை வலியில்லை
பொய்களுக்கு இங்கே வழியுமில்லை

உறங்காதே மனமே