Thursday, September 29, 2016

போகும் நேரங்கள்

எனக்கு நேரம் போதவில்லை
எதை முந்தி செய்வது
எதை பிந்தி செய்வது
என்று என்னை நானே குழப்பிக்கொள்கிறேன்
போதாத நேரம்
போக போக குறைகிறது

போக விரும்பிய வாசல்கள் மூடி கிடக்கிறது
போக விரும்பாத பாதைகள் வரவேற்கிறது

போக போக இன்னும் என்னென்ன நடக்குமோ
நடக்கவிருக்கும் நேரங்களை
நடக்காமல் நிறுத்த முடியுமோ

போய்தான் பார்ப்போம் வியப்புடன்
புதிராக போக வேண்டிய நேரங்கள்
முன்னால் காத்து நிற்கிறது

உங்களைபோல் நானும் ஒருநாள்
நேரம் வந்ததும்
போக தான் போகிறேன்

அதுவரை நிற்காமல் போய் கொண்டே
இருப்பேன்