Saturday, December 31, 2016

பிறப்பா இறப்பா ?

இந்த உலகில் மீண்டும்
நமது பிறப்போ மரணமோ
நிகழ போவதில்லை
அது தெரிந்தும்
நாம் மீண்டும் புதிதாய் பிறக்க முயல்கிறோம்
 முடியாத போது மரணித்து பார்க்கிறோம்
புதிய உலகில் புதிய பிறப்பை தேடி செல்கிறோம்
அப்படி அங்கு மீண்டும் பிறப்போமா ? இலையா ?
என்பது நமக்கு தெரியாது
அது தெரிந்தால்
நமக்கு இங்கு இனி வேலைகள் ஏது .


Friday, December 30, 2016

தனிமையில் காமம்

காமம் கொள்ளா நிலை
ஏக்கத்தை தூண்டுகிறது
ஏனோ இந்த விரத நிலை
தனிமையில் தொடர்கிறது

காமம் தனிமையில் வாடி
வெகு தூரம் பயணமாகிறது

காமம் அற்ற உடலாய்
காதல் அற்ற நிழலாய்
காலத்தால் கரைகிறது
வாழ்க்கை


Tuesday, December 27, 2016

காதலி இல்லை

என் காதலி இன்னும் பிறக்கவே இல்லை
அவள் கருவிலே கள்ளிப்பால் குடித்துவிட்டாள்
அவள் தாய்மொழி இல்லாதவள்
தலையெழுத்தும் இல்லாதவள்
ஒருவேளை அவள் தப்பித்து பிறந்திருந்தால்
இந்நேரம் என்னை அவள் சந்தித்து இருப்பாள்
நான் கூட எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்
என்று நம்பி இருப்பேன்
உண்மையில்
அவள் தப்பிக்கவுமில்லை
பிழைக்கவுமில்லை
அவளை நான் இன்னும் சந்திக்கவுமில்லை
ஆகவே எனக்கு
காதலி என்பவளே இல்லை


Thursday, December 22, 2016

எச்சரிக்கை ஒதுங்கிவிடுங்கள்

தந்திர மாயக்காரர்கள்
சூனியக்காரர்களை கடந்து
புண்ணிய ஸ்தலங்களை எழுப்பி
குப்பைகளில் படுத்துறங்கி
சாக்கடைகளை பருகி
வந்திருக்கிறேன்

நீங்கள் காட்டும்
மோடிமஸ்தான் வேலைகள் எல்லாம்
என்னிடம் பலிக்காது

மேம்போக்கான பார்வையிலே
உங்களை
சூரசம்காரம் செய்துவிடுவேன்

நான் களத்தில் நிற்கிறேன்
எச்சரிக்கை மணி ஒலிக்கும்போதே
உயிர் பிட்சை போடுகிறேன்
ஒதுங்கிவிடுங்கள் அல்லது
ஓடிவிடுங்கள்


முதலிரவு

ஆம் முதலிரவுதான்
இங்கே யார் முதலில் ஆடையை அவிழ்ப்பது
என்பதில் ஒரு சின்ன சந்தேகம்.
இருந்தாலும் அவிழ்த்துதானே ஆக வேண்டும்
என்கிற எண்ணமும் பின்னிருந்து
ஆசைகளை முன்னுக்கு தள்ளுகிறது

போதும் போதும்
உங்கள் மேல் மூச்சை
கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
நான் இதற்க்கு மேல்
சொல்ல விரும்பவில்லை



Monday, December 19, 2016

சிவப்புக் கோடு

இந்த கோட்டுக்கு கீழே தாழ்ச்சி
இந்த கொடுக்கு மேலே புகழ்ச்சி
இடையே தடை போடும் சூழ்ச்சி

மேலே இருந்து வீசப்படும்
ரொட்டி துண்டுக்காக
கீழே காத்து கிடக்குது
அடிமையின் கூட்டம்

கீழ் உள்ளவர் உழைப்பை சுரண்டி
மேலே வாழ துடிக்குது வஞ்சக கூட்டம்

இடையில் உரிமை குரல் கொடுக்குது
சிவப்பு கூட்டம்

சிவப்புக் கோடு
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மான உரிமைக் கோடு

மேலே உள்ளவன் விட்டுக்கொடுத்து
இறக்கம் கொண்டு
கீழே வருவதும் கடினம்

கீழே உள்ளவன் முட்டிமோதி
எட்டி பிடித்து
மேலே செல்வதும் கடினம்

இந்த கடின கோட்பாட்டை
அழிக்கப் பிறந்ததே
இந்த முயற்சி
சிவப்பின் முயற்சி

மனிதத்தில் தாழ்ச்சி என்பதே இல்லை
இங்கு அனைவரும் சமம்
இந்த கோட்பாட்டின் உரிமையை பெறுவதே
இந்த சிவப்பின் லட்சியம்

Saturday, December 17, 2016

செல்ல குட்டியின் முத்தம்

அன்புள்ள அம்மா
அன்புள்ள அப்பா
அம்மாவுக்கு முத்தம்
அப்பாவுக்கு முத்தம்
இருவருக்கும் இந்த
அன்பின் முத்தம்

முத்தின் முத்தம்
முத்தத்தின் முத்தம்
இந்த செல்ல குட்டியின் முத்தம்

அன்புள்ள
அம்மா அப்பாவிற்கு
என் முத்தம்


Tuesday, December 13, 2016

நான் சிறந்த நடிகன்

நான் சிறந்த நடிகன்
என் நாடகங்களுக்கு
முன் பயிற்சியே கிடையாது
நேரடி காட்சி தான்
மிகவும்
அப்பட்டமாகவும்
எதார்த்தமாகவும்
குழப்பங்களை
சாமாளிக்க தெரிந்ததாகவும்
தோல்விகளையும் இடர்பாடுகளையும்
கதை கருவாகவும்
கதையின் களமாகவும்
இருக்கும்
இறுதியில் கைதட்டல்களுடன்
கதை என் போக்கிலே பயணித்து
சிறப்புடன்  மகிழ்ச்சியுடன்
பாராட்டுகளுடன்
நிறைவுபெறும்


Monday, December 12, 2016

நானும் கடவுளாகிறேன்

நான் நன்றாக வாழ்ந்த போது
என்னை சுற்றி நின்று வாழ்த்தியவர்கள்
நான் சற்றே தாழ்ந்த போது
என்னை தூற்றி கொன்று வீழ்த்தினார்கள்

என்னை கட்டிலுக்கு
கரம் பிடித்து இழுத்தவர்கள் கூட
என்னை யார் என்றே தெரியாது என்றார்கள்

ஒரு சமையம்
நான் தாழ்ந்து இருந்தேன்
அதற்க்கு முன்பு
நான் வாழ்ந்து இருந்தேன்

மீண்டும் யாரோ விட்டு சென்ற
கருணையால்
கிருபையால்
வாழ்கிறேன்

அனுபவங்களை சுமந்து
ஞான நிலையை கடந்து
கால ஓட்டத்தில்
நானும் கடவுளாகிறேன்


Friday, December 9, 2016

காதலற்றவள்

காரியத்தில் கண் வைத்து
காய் நகர்த்தும் மனம்
உடலையே விலையாக்க துணியும் குணம்
காதல் கண்களில் மட்டும் தான்
மனதினில் இல்லை
என்பதனை வெளிக்காட்டாத
கச்சித நடிப்பு
மேனி
அழகை கூட்டி
ஆசையை தூண்டி
அடிமைகளை அறுவடை செய்யும்

அவளுக்கும் ஆசைகள் இருந்தாலும்
ஆழ்மனதில் குடிகொண்ட ஆணவம்
அவளை காதலற்றவாளாக செய்துவிடும்
அனால் அவள் காமம் அற்றவள் கிடையாது.
அவள் வெறும் காதலற்றவள்..


காதலற்றவன்

கடமைகள் தலைக்கு
ஏறிய நிலையில்
முற்றிலும் காதலற்றவனாய்
ஆகி விட்டதை போல் ஒரு உணர்வு
இது உண்மை தானா
காதல் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா ?
சலிப்பாக போலி காதலிகளை தேடுகிறேன்
அவர்களிடம் உள்ள
அந்த காதல் உணர்வுகளை மட்டுமே
திருட விரும்பிகிறேன் .
அந்த காதலை பருகிய பின்
மீண்டும் காதலற்றவனாய் திரியவே விரும்புகிறேன்.