Thursday, December 22, 2016

எச்சரிக்கை ஒதுங்கிவிடுங்கள்

தந்திர மாயக்காரர்கள்
சூனியக்காரர்களை கடந்து
புண்ணிய ஸ்தலங்களை எழுப்பி
குப்பைகளில் படுத்துறங்கி
சாக்கடைகளை பருகி
வந்திருக்கிறேன்

நீங்கள் காட்டும்
மோடிமஸ்தான் வேலைகள் எல்லாம்
என்னிடம் பலிக்காது

மேம்போக்கான பார்வையிலே
உங்களை
சூரசம்காரம் செய்துவிடுவேன்

நான் களத்தில் நிற்கிறேன்
எச்சரிக்கை மணி ஒலிக்கும்போதே
உயிர் பிட்சை போடுகிறேன்
ஒதுங்கிவிடுங்கள் அல்லது
ஓடிவிடுங்கள்