Saturday, January 28, 2017

மௌன மொழியானாள்

விழியோடு விழி வைத்து
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள்

வேட்கம் தாங்காமலே
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள்

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன்
முகம் மலர்ந்து நின்றாள்

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள்
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள்

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.


Friday, January 13, 2017

புது பாதை

எதுவுமே வாய்க்கவில்லை என்றால்
கவலை இல்லை
அதுவும் நல்லதுதான்
நமக்கு இனி
எந்த எதுகை மோனையும் தேவையில்லை
நமக்கான தடத்தை நாமே பதித்து                  (பதிப்போம்- எதிர்காலம் )
நாம் போகும் பாதை எல்லாமே
புது பாதை தான் .


Wednesday, January 11, 2017

கவிதை கலை

கண்டேன் கலையை
கவிதையின் வடிவில்
கண்ட கவிதை என்னவெனில்
வார்த்தைகள் வரிசை வடிவில்
ஓவியமாய் அழகாய்
மனபாட்டை இசைக்கிறது
மனதினுள் ஊடுருவி
மாற்றங்களை நிகழ்த்துகிறது
மாயையாய்
காலத்தை கடக்கிறது
ஜீவன் கொண்டு
கவிதையாய் வாழ்கிறது


காரிய சொற்கள்

சொப்பனத்தில் தோன்றும் மாயாஜாலம்
விழிப்பில் விழிகளுக்கு புலப்படுவதில்லை
அகலும் ஆகாயங்களுக்கு நிரந்திர வடிவமில்லை
அனுசரணை கொள்ளும் அன்புக்கு
ஆழ்கடலும் ஆழமில்லை


Sunday, January 8, 2017

புரியாத உணர்வுகள்

 என் உணர்வுகள் அவளுக்கு புரிகிறது
இருந்தாலும் அதை அவள் உள்வாங்கிக்கொள்வதில்லை
அவளை அது நெருங்கும்போதே
மேலோட்டமாக அதை புறம் தள்ளி விடுவாள்
அதுவே அவளுக்கு நல்லது என கருதுகிறாள்

அவள் உள்வாங்காத உணர்வுகளை
மீண்டும் நானே கவலையாக சுமக்க நெருடுகிறது
புறம்தள்ளப்பட்ட அந்த உணர்வுகள்
என் உள்ளே இருந்து என்னை கொல்லுகிறது
என்பதனை எப்பொழுது அவள்
உள்வாங்கிக்கொள்வாள்


நிழல் படைப்பாளி

என் புருவங்களை கூட தரித்துக்கொண்டாள்
என் அசைவுகள் அனைத்தையும் பிரதி எடுத்துகொண்டாள்
இப்பொழுது என்னைப்போலவே சில நிஜ சித்திரங்களை வரைகிறாள்
அதற்க்கு உயிர் தந்து என் பெயர் சூட்டி அதனுடனே வாழ்ந்து வருகிறாள்
இருந்தாலும் என்னை அவள் படைப்புகள் சமன் செய்வதில்லை
அதை அவள் உணர்ந்தும் இருக்கிறாள்


என்னை சுற்றும் பறவை

நான் எப்போதோ அந்த பறவையை
என் கூட்டிலிருந்து சுதந்திரமாக வெளியேற்றி விட்டேன்
அனால் அது இன்னும்
என்னை சுற்றியே வருகிறது
என் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிகிறது
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை
அதற்க்கு உண்மையான அன்பு காட்ட
இந்த உலகில் என்னை தவிர
வேறு யாருமில்லை


Friday, January 6, 2017

வாழ்கிறேன் பார்

கடந்து வந்த வாழ்க்கையில் திரும்ப பின்னுக்கு சென்று
தவறுகளை எல்லாம் திருத்த முடியாத நிலையில்
உன்முன் மன்னிப்பு பிச்சை கேட்டு நிற்கிறேன்
பாராய் முகமாய் என்னைவிட்டு
விலகி சென்றது ஏனோ.

இனி எனக்கு கைகொடுப்பார் யாரோ
தனியே தவியாய் தவித்தேன்

ஆண்டுகள் கடந்தும்
உன்னிடம் எனக்கு
கரிசனம் கிடைக்காததால்
நான் தொற்றுபோகவில்லை
மாறாக தட்டி தவழ்ந்து
பிழைத்து விட்டேன்

இனி வாழ்வேன்
சிறப்பாக மகிழ்வாக
வாழ்ந்து காட்டுவேன்

நீ பார்த்து வியக்கும்படி



Sunday, January 1, 2017

தொடர்பில் இரு

விழி மீது நின்று கொண்டு
என் வழி மறைக்கிறாய்

சற்று ஒதுங்கினால்
நான் காணாத பாதைகள் புலப்படும்

ஆனாலும் ஒருபோதும் என்னைவிட்டு
அகலாதே அன்பே
நான் உதிர்ந்தாலும்
என் காதல் உன்னைவிட்டு
தள்ளிபோவதில்லை உயிரே.

முடிந்தவரை என்னுடன்
தொடர்பில் இரு இறுதிவரை