Sunday, May 5, 2019

காதல் படிமம்

 காலத்தால் அழியாமல்

காலம்காலமாய் தொடரும் 

காதல் உணர்வை

தேடி பயணிக்கிறேன்.


அந்த உணர்வு நம்முள்

காதல் படிமமாக படிந்துள்ளது..

அந்த காதல் படிமத்தை

 அகழ்வாராச்சி செய்ய போகிறேன்..


இது கண்களால் வந்த காதல் படிமம்

அதை தோண்டி எடுக்கிறேன்

 அந்த படிம கண்களில் கண்ட ஒளி

 வருடங்கள் கழித்தும் அப்படியே இருக்கிறது..

இந்த படிமம் பல தாக்கங்களை விட்டு சென்றது.


இது செவி ஒலியால் வந்த காதல் படிமம்

அதை தோண்டி எடுக்கிறேன்..

 பல வருடங்கள் ஒலியாய் ஒலித்து

 ஓய்ந்து போன இந்த படிமம்

 சில ஏக்கங்களை விட்டு சென்றது..


இது எழுத்தால் வந்த காதல் படிமம்

அதை தோண்டி எடுக்கிறேன்

இந்த படிமம் ஒளி காட்டவுமில்லை ஒலி வீசவுமில்லை..

ஒன்றும் விளங்காத ஊமை படிம பொருளாய் இருக்கிறது..