மெய்யாக
சேய்யாக
அணியாக
பணியாக
பாயாக
தாயாக
அன்பாக
பண்பாக
ஆசானாக
ஈசனாக
நிறையாக
இறையாக
கண்ணாடியின் முகமும் நாம் தானே
அதன் அகமும் நம் எண்ணம் தானே
நம் அகத்தை நம் பிம்பத்தில்
பிரதிபலிப்பதில்லை
பிரதிபலிப்பதெல்லாம் நம் அங்கம் தேய்மானத்தை தான்..
நம் மேல் அலங்கார வேலைகளை தான்
என் பெரும் தனிமையை போக்க
பல யுக்திகளை கையாளுவது உண்டு
அந்த யுக்திகள் எல்லாம் நிறைந்துபோய்
யுக்திகளே நேரமின்மையால் தவிக்கிறது .
அதில் தனிமை அற்றுப்போகிறது