Tuesday, August 22, 2023

முக அக காதல்

 

முகங்கள் பாராமல் பழகினோம்

முகங்கள் பார்த்த பிறகு மயங்கினோம்

தேகம் தழுவிகொள்ள தயங்கினோம்

ஒன்றாக ஒரு உயிராய் பயணித்தோம்

சில சில காரணங்களுக்காக

சிறு சிறு பிரிவுகளை சந்தித்தோம்

காலங்கள் கடத்தினோம்

ஆனால் அகத்தில்

காதலை வளர்த்தோம் 

முகம் அது மாறியது உருவம் மாறியது

முகம் மாறியும் அகத்தின் காதல் மாறவில்லை

நம் இணையாக துணையாக மாற

யாரும் நமக்கு தடையில்லை

இருந்தபோதும் நாம் புரிந்து பிரிந்து இருக்கிறோம்

இதற்கு காரணம் யார்

முகமா அகமா ?

நம் காதல் விடை சொல்லும்

நம் காதல் வெல்லும்