வா நண்பா வா
வா நண்பா வா
எத்தனையோ வழிகள் இருக்குது
யார் தான் உன்னை தடுப்பது
வா நண்பா வா
வா நண்பா வா
கஷ்டம் நஷ்டம் கடக்கனும்
பெற்றோர் துயரை துடைக்கனும்
வா நண்பா வா
வா நண்பா வா
தப்பான வழிகளை தவிர்க்கனும்
தன்னம்பிக்கையுடன் ஜெயிக்கனும்
வா நண்பா வா
வா நண்பா வா
பெரிய படிப்பு படிக்கனும்
பதவி பதக்கம் வாங்கனும்
வா நண்பா வா
வா நண்பா வா
பெரியோரை மதிக்கனும்
போதை பழக்கத்தை தவிர்க்கனும்
வா நண்பா வா
வா நண்பா வா
கைத்தொழில் ஒன்றை கற்கணும்
காரியத்தில் கண்ணாய் இருக்கனும்
வா நண்பா வா
வா நண்பா வா
காசை சேர்த்து வைக்கனும்
கண் போல குடும்ப
த்தை காக்கணும்
வா நண்பா வா
வா நண்பா வா