Thursday, February 28, 2013

மனசு மாட்டிகிச்சி

ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
வாசல் முன் குடி இருப்போம்

அலை நுரை அள்ளி
முகம் துடைப்போம்

மேகத்தின் நிழலில்
மென்முத்தம் பதிப்போம்

மாலை பொழுதில்
காதல் வேதம் படிப்போம்

காம கடலில் மூழ்கி
கரை ஏறுவோம்

-------------------------------------------------------------------------------

காதல் கடல் கரை
ஆதவன் எட்டி பார்க்கிறான்
உன் முந்தானையில் குடை பிடிப்போம் .

வங்க கடல் வலை விரிக்கிறாள்
கரையோரம் பாதம்  பதிப்போம்

மணல் வீடு கட்டி
 வாசல் முன் பள்ளிகொள்வோம்

நிலவு ஒளியில் சங்கமித்து
ஓர் உடலாய் புரிந்து (இசைந்து) கொள்வோம்