யாரோ இவன்
கடந்து போகையில்
என் நாடி துடிப்பை களவு செய்கிறான்.
மீண்டும் எனை
அவன் பிடியிலிருந்து
மீளாதவாறு
கனவுகளால் கட்டி இழுக்கிறான்
தூரம் செல்கிறான்
துறத்தி வருகிறான்
துங்க விடாமல்
என்னை தூக்கிலிடுகிறான்.
வருவானோ அடைக்கலம் தருவானோ
என்று அனுதினமும் ஏங்க வைக்கிறான்
பார்வையால்
மந்திரம் செய்கிறான்
ஆசையால்
என்னை தந்திரம்
செய்ய செய்கிறான்
என் மனதை தைக்கிறான்
பூவாய் கொய்கிறான் .
கருணை பாராமல்
காதலால் என்னை
அடிமை செய்கிறான் .