நம் நினைவுகளை எல்லாம் திரட்டி
என் கனவுகளில்
கவிதை தொகுப்பு ஒன்று செய்துள்ளேன் .
நீயும் நானும்
வானத்தின் மேல
பூக்களின் வனத்தின் நடுவே
விண்மீன் சமைத்து
பவழ மாளிகை பந்தலில்
பந்தி போட்டு
உண்டோர் இளைப்பாற
நம் காதல் கதை காவியம்
மெல்வோம்
கண்கள் ஓரம்
வழிந்த நதியில்
நான் நீந்தி
இதழில் கரை சேர்ந்த
காமம் சொல்வோம் .
சாதி என்னும்
சாத்தானை
சங்கறுத்த
சங்கதியை
சங்கொலிப்போம்
வீடும் நாடும்
விட்டோடி
வீதி வீளகினடியில்
வீழித்திருந்த
வீனாக்களை
வீனாவுவோம்
வாலிபம் தொலைத்தோம்
வனாந்தரத்தில்
வந்துதோம்
வாழ்ந்தோம் செத்தோம்
வந்தோருக்கும் வருபவருக்கும்
வரலாறானோம் !