குறு குறு கருமேகம் மழையால்
என் தேகம் தொட்டு செல்லும்
சில்லென்று வீசும் காற்று
என் பெண்மையை சீண்டி போகும்
காளையர் பார்வையில் சிக்கிக்கொள்ளும்
என் கருங்கூந்தலும் கருவிழி மையும்
மாதம் தீண்டும் திங்களும் பௌர்ணமியும்
என் மனதை களவு கொள்ளும்
வெட்கம் முறிக்க நெட்டி பறிக்கிறேன்
ஊமை சொல்லால் காதல் மீள்கிறேன்.
(காதலன் நினைவுகள்)
மெல்ல செல்லும் மடிந்து செல்லும் ஒடிந்து செல்லும்
அவன் மட்டும் என்னை கண்டு செல்வதே இல்லை