Friday, October 18, 2013

சொல்லில் அல்லா உணர்வு

முதன் முதலில்
உன் பார்வையும் என் பார்வையும் சேர்ந்த பொழுது
ஒரு உணர்வு
அது
சொல்லில் அல்லா உணர்வு

பெண்ணே
உன் பெயர் சொன்னால்  போதும்
 அது                                                            (என் நாவிற்கு இனிமை சேர்க்கும்)
என் வானத்தில் விண்மீன் தூறல் போல்
இதயத்தை வருடி செல்லும் .

நேரம்
 என்பது
உன் நினைவினால் கரைந்து ஓடும் .

உன்னை பார்த்தாலே
என் தலை மேகம் முட்டும்
உற்ச்சாகம் உயிரை தட்டும்

உன்னை காதலிக்க
காத்து காத்து
காற்றாய் திரிகிறேன் .