நான் கனவுகள்
கனவுகளின் கவிதை தொகுப்பு
Pages
வீடு
என்னை நாடு
Tuesday, November 26, 2013
தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி
பார்க்கிறேன்
தேய்பிறை போல்
தேய்கிறேன்
விழி ஓரம்
நீர் துளி
வழிந்தொடுதே......
வழிதேடுதே..........
இரு தோள்களில்
உறவாடுதே
உயிர் நோவுதே........
Saturday, November 23, 2013
என்னை மறந்து விட்டேன்
மறந்து விட்டேன்
என்று
நினைத்து விட்டாள்
என்னை
இதழ்களில் அவள் பெயர்
மொழிய வைத்தாள்
விழிகளில் நீர் துளி
பெருக வைத்தாள்
கடந்து செல்கிறாள்
கண்டும் காணாமல்
களவுக் காரி
கள் நெஞ்சு காரி
(ஊமை மாயம் செய்கிறாள் )
Tuesday, November 12, 2013
துறவி
அதிகாரம் கலைத்து விட்டேன்
ஆட்டத்தை முடித்துக்கொண்டேன்
அரியணை துறந்து
அடிமையாக மாறினேன்
தோல்விக்கு முன்
துறவறம் புகுந்துகொண்டேன்
Friday, November 8, 2013
அவளை இரசித்தேன்
அவள் பின்னிய கூந்தலில்
சிறு பூங்காடு
நெற்றியில் சரிந்து விழும்
அந்த ஒற்றை முடி
சின்னச்சிறு பொட்டு
இமை மறைக்கும் அந்த ஓரப்பார்வை
மெல்லியப் புன்னகை
நகம் கடிக்கும் செவ்விய இதழ்
நாணிய தலை.
முனுகிய வார்த்தைகள்
மூடிய அங்கங்கள்
கோணி நின்று
கால்விரல் மடித்து
விழி நோக்குவாள்
Thursday, November 7, 2013
துணிவு
துணிந்தவனுக்கு துரும்பும் தோள்கொடுக்கும்
நலிந்தால் எறும்பும் காலால் மிதிக்கும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)