Saturday, April 26, 2014

பனித்துளி



உயிரே உயிரே போகாதே
உள்ளம் இங்கு தாங்காதே
.
.
.
.
.

பூஞ்ச்சிறகை விரிக்கிறேன்
வானம் எட்டி பிடிக்கிறேன்


Tuesday, April 22, 2014

பட்டாம்புச்சி



கண்ணே உன்னை காணும்முன்
காதல் வேண்டாமேன்றிருந்தேன்

விழியும் விழியும்
விளம்பிய பின்பு
வழி மறந்துபோனேன்
என்னை மறந்து போனேன்
தன்னிலை யற்று போனேன்
தறுதலையாய்  போனேன்
பாதை தொலைத்து
பாதசாரியாய் (பரதேசியாய்) போனேன்


வழியில் ஒரு இலையில்லா
மரம் கண்டேன்
அதன் காலடியில்
இளைப்பாரிக்கொண்டேன்

இளமை என்னும் இளைஞன்
என்னை விட்டு போகக்கண்டேன்

வறுமை கண்டேன்
 வனாந்திரம் கண்டேன்

வாடிய மலரை கண்டேன்
 வண்ணமிழக்க கண்டேன்
   வயதை கொண்டேன்

மரிக்கிறேன்
பறக்கிறேன்
பட்டாம்புச்சியாக



Sunday, April 20, 2014

உண்மை பொய்யாய்

கனவுகள் பிழையாய்
கற்பனைகள் நிஜமாய்
உண்மை பொய்யாய்
மாறிவிட




Sunday, April 13, 2014

நெருப்பு குதிரை




கடிவாளம் எனக்கில்லை
கடின மனமும் எனக்கில்லை

கைகள் ஏந்தவும் மாட்டேன்
கால்களை வாரவும் மாட்டேன்

ஓய்வில்லாமல் ஓடுகிறேன்
ஒளிவிளக்காய் எரிகிறேன்

சிரம் தாழ்த்துகிறேன்
சிகரம் தொடுகிறேன்

நான் நீந்த தெரிந்த
நெருப்பு குதிரை

Tuesday, April 8, 2014

சட்டென மாறிய வானிலை

சட்டென மாறிய வானிலை
கோடையில் பட்டென   (பட்டென கோடையில்)
மழையால் என்னை தொட்டு சென்றது

பாதியில் விட்டு பரிதவிக்க விட்டு சென்றது