Wednesday, July 30, 2014

கவிதை தொகுப்பு

அவளுக்கு என்னை பிடித்திருந்தால்
குடும்பமலராக மாறி இருப்பேன்

பிடிக்காத காரணத்தால்
கவிதை தொகுப்பாக மாறியுள்ளேன்.

கடல் காதலர்கள்




கரை காவியங்கள்
கடல் காவியங்கலாகாது
 இதனுடன் ஒத்தும்போகாது

ஆகாயம் மேகம்
மட்டும் பொதுவாகும்
நீலம் நீராகும்

காற்று திசை காட்டும்
துடுப்பு படகோட்டும்

சூழ்நிலை மாறும்
சுழல் ஆளும்
பெரும்காற்று வீசும்
பேரிடர் செய்யும்
ஆழிபேரலை
ஆணவம் கொள்ளும்
அனைத்தையும் கொல்லும்


to be continued.........

Sunday, July 27, 2014

ஒருதலை காமம்



.
.
.
.
.
.
.
ஒரே நேர் கோட்டில் முடிகிறது
பக்க கோடில்லாமல்.
ஒருதலை காமம்.

                                                           நான் கனவுகள்

Friday, July 18, 2014

சொல் நில்

சொல் என்றால்
சொல்லாமல் போகிறாள்
நில் என்றால்
நில்லாமல் போகிறாள்


நீருக்கு நெருப்பாகிறாள்  
(நெருப்புக்கு நீராகிறாள்)
தென்றலுக்கு புயலாகிறாள் 
(புயலுக்கு தென்றலாகிறாள்)

மழைக்கு இடியாகிறாள் 
மலைக்கு மகுடமாகிறாள்

ஏட்டுக்கு எழுத்தாகிறாள்
என்
எண்ணமெல்லாம் அவளாகிறாள்


Wednesday, July 16, 2014

நில்லென்று சொல்லும்போதே

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.

கண்ணே உன் பார்வை போதும்
கன்மலையை தாங்குவேன் .

காலடி தேடினேன்
 காலத்தை இழக்கிறேன்

பூவே உன் நேசம் போதும்
நான் இங்கு வாழவே

நாட்களே நலிந்திடு
நாழிகையில் உறைந்திடு

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.
ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

கண்ணே உன் கருணை போதும்
கல்லறையை தேடினேன்.