Wednesday, October 21, 2015

பட்டுநூல்காரி

கிருஷ்ண லீலாவின் முடிவு அவள்
சோம்நாத் கோவிலின் ஆரத்தி தீபம் அவள்

ஆர்யா வம்சம் அவள்
நாடோடி கூட்டம் அவள்

முஹமத் கஜினியீன் அடிமை அவள்
மராத்தியர்களிடம் தஞ்சம் அடைந்தவள் அவள்
விஜயநகர தேசத்தின் அழைப்பிதழ்  அவள்
ராணி மங்கமாவின்  குறிப்பு அவள்

புனித நூல் நெய்பவள் அவள்
பட்டுநூல் தைப்பவள் அவள்
பட்டுநூல்காரி அவள்

(Image Created by Myself "Kathala Va da")

(Unknown Language)