Monday, December 28, 2015

ஆதியும் அந்தமும்

என்மீது தவறேதும் இருப்பீன்
என்னை நானே தண்டித்து கொள்கிறேன்

பிறகு என்னிடமே பாவமன்னிப்பு கோரி
என்னை நானே மன்னித்து கொள்கிறேன்

என்னகுள்ளே அகிலத்தையும் சுருட்டி புதைத்து
நானே ஆதியும் நானே அந்தமுமாகிறேன்



எட்டா குணம்

அது எட்டா கனி என்று தெரிந்தும்
அதை எட்டி பறிக்க துடிக்குது மனம்

எட்டி விட்ட பின்பு
அதை
எட்டி (உதைக்குது) எறியுது குணம்



Tuesday, December 22, 2015

கோபம் கொள்கிறாள்

தனிமையில்
என்னை பொதுவாய் வைத்தேன்
பொது சிந்தனையுள் என்னை தைத்தேன்
சம நீதி கண்டெடுத்தேன்
தன்னலம்மற்று கிடந்தேன்

எங்கிருந்தோ வந்தாள்
சுயநலம் கொண்டாள்
என்னை திசை மாற்ற முயன்றாள்
முடியவில்லை அவளால்

அதீத காதலால் என்மேல் கோபம் கொண்டாள்
என்னை கடத்தி தன் வசம் வைத்து கொண்டாள்
அவளிடமிருந்து தப்பிக்க மனமில்லை இருந்தபோதும்
கொள்கையை விட்டு கொடுக்கவும் மனமில்லை
மாட்டிக்கொண்டேன் சரியாக 
என்னை நானே அவளிடம் சிறை வைத்துக்கொண்டேன் முறையாக.





மாமர கிளைதனில்

மா மர கிளைதனில்
நான் படுத்துறங்க
சல சல வென விசும் காற்றில்
மா இலை வாசம் என்னை தழுவிக்கொள்ள
ஒரு சிறு தூக்கம் போட்டேன்
சிறுவயதில்


Sunday, December 20, 2015

கொல்லும் வினாக்கள்

என்னை தேடி வரும் வினாக்கள்
என்னை கொல்லாமல் கொல்லுதே

என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை
எப்படி கரை சேர்ப்பேன் என்று என் மனம் கேட்கிறது

நாளை காலை உணவுக்கு எங்கே போவது
என்று இந்த இரவு என்னை கேட்கிறது

எப்படி கடனை திருப்பி கொடுப்பேன்
இன்று குட்டி போட்ட வட்டி கேட்கிறது

காசில்லாமல் காதலிகளை கைவிட்டேன்
நீ ஆம்பளைய என்று காமம் கேட்கிறது

யார் எவ்வளவு கேவலமாக  கேட்டாலும்
எனக்கு  என்ன என்று செல்கிறேன்
நீ பைத்திமா என்று ஊர் கேட்கிறது






i-Robot நான் இயந்திரன்

நான் சுவாசிக்க Oxygen தேவை இல்லை
என்னுள்ளே இரத்த ஓட்டம் ஓடவில்லை

வில்லின்றி அம்பாக பறப்பேன்
விதை இன்றி விருட்சமாக வளர்வேன்

.................................will be Continued................i-Robot நான் இயந்திரன்



Thursday, December 17, 2015

கண்ண கட்டி காட்டுல விட்டா

கண்ண கட்டி காட்டுல விட்டா
கைய கட்டி கடலுல விட்டா


என்ன சொல்லி நானும் பாடுவேன்
இப்படியே தான் நொந்து சாகுறேன்

தன்னே தனே தான ந ந நா.........ஆ......
தன்னே நானே நானே ந நா......ஆ......





Tuesday, December 15, 2015

உடுருவி வருகிறாள்

அவள் என்னை விட்டு சென்றதும்
அவள் பின்னே என் கவிதைகளும் சென்று விடுகிறது

மறுகணம்
அவள் அதை சுமந்துகொண்டு
என் நினைவுகளோடு
என்னை சுற்றி
வளம் வருகிறாள்
-----------------------------------------------
மொழிகள் உயிரினுள் உடுருவி
கவிதைகளால் எங்களை பிணைத்து கொண்டது
----------------------------------------------------------