Tuesday, December 22, 2015

கோபம் கொள்கிறாள்

தனிமையில்
என்னை பொதுவாய் வைத்தேன்
பொது சிந்தனையுள் என்னை தைத்தேன்
சம நீதி கண்டெடுத்தேன்
தன்னலம்மற்று கிடந்தேன்

எங்கிருந்தோ வந்தாள்
சுயநலம் கொண்டாள்
என்னை திசை மாற்ற முயன்றாள்
முடியவில்லை அவளால்

அதீத காதலால் என்மேல் கோபம் கொண்டாள்
என்னை கடத்தி தன் வசம் வைத்து கொண்டாள்
அவளிடமிருந்து தப்பிக்க மனமில்லை இருந்தபோதும்
கொள்கையை விட்டு கொடுக்கவும் மனமில்லை
மாட்டிக்கொண்டேன் சரியாக 
என்னை நானே அவளிடம் சிறை வைத்துக்கொண்டேன் முறையாக.